பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

Philippines
Philippines

பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நீண்ட நேரம் நில அதிர்வும் ஏற்பட்டதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்தன. சில பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்டுகின்றன.