சுவிஸில் பிரபலமான இரவு விடுதிக்கு சென்ற 300 பேர் தனிமைப்படுத்தல்

625.500.560.350.160.300.053.800.748.160.70 4 1
625.500.560.350.160.300.053.800.748.160.70 4 1

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் பிரபலமான இரவு விடுதி ஒன்று சனிக்கிழமை(25) இரவுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பகல் பெர்ன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்தபடி, குறித்த விடுதியானது 10 நாட்களுக்கு மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் குறித்த விடுதிக்கு சென்று திரும்பிய ஒருவர், இந்த வெள்ளிக்கிழமை கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில்,சனிக்கிழமையும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்ட அந்த இருவரில் ஒருவர், கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்ட விடுதிக்கு சென்றுள்ளார்.

அவருக்கு ஏற்கனவே கொரோனா அறிகுறிகள் இருந்தது எனவும், இருப்பினும் அவர் விடுதிக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வியாழக்கிழமை அந்த விடுதியில் இவருடன் இருந்தவர்கள் மொத்தம் 140 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து பெர்ன் சுகாதார நிர்வாகம் குறித்த விடுதியை மூட உத்தரவிட்டதுடன், ஞாயிறு வரை அந்த விடுதியில் சென்று வந்தவர்கள் என 305 பேரை அடையாளம் கண்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்து வரும் நிலையில்,

தற்போது குறித்த விடுதியில் சென்று வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட 305 பேரையும் அடுத்த 10 நாட்கள் குடியிருப்பை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இவர்கள் மண்டல சுகாதார அமைப்பின் கண்காணிப்பிலும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.