அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா

202007272011281371 Donald Trumps National Security Advisor Tests Positive For SECVPF
202007272011281371 Donald Trumps National Security Advisor Tests Positive For SECVPF

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 43 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 20 லட்சத்து 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலக்காகியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருபவர் ராபர்ட் ஒ பிரையன். இவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரையனுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும், அறிகுறிகள் சிறிய அளவில் இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. மேலும், அவர் தனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரையனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தபோது அதிபர் டிரம்பிற்கும் துணை அதிபர் மைக் பென்சுக்கும் வைரஸ் பரவியதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளைமாளிகையில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கும், அதிபர் மற்றும் துணை அதிபருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
வெள்ளைமாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.