பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொவிட் 19

download 7
download 7

நோர்வே பயணக்கப்பலில் பயணித்த 41 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

நோர்வே நிறுவனத்திற்கு சொந்தமான (MS Roald Amundsen) என்ற கப்பல் வடக்கு நோர்வேயின்  (Tromso)) துறைமுகத்தை வந்தடைந்த போது மேற்கொண்ட சோதனையின் போதே கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பலில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ள நிலையில் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் கொவிட்19 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தாங்கள் இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளோம் என அந்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் தங்களது தவறான முடிவுகளால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 6 லட்சத்து 96 ஆயிரத்து 794 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 16 லட்சத்து 64 ஆயிரத்து 689 பேர் இது வரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது