பிக்பொஸ் வீட்டின் புதிய தலைவர் இவர்தான்!

download 3 2
download 3 2

பிக்பொஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் நிலையில் இன்று புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ரமேஷ் தலைவராக இருந்த நிலையில் இந்த வார தலைவரை தெரிவு செய்ய போட்டி ஒன்று வைக்கப்படுகிறது.

வழக்கமாக ஒரு வாரம் முழுவதும் சிறப்பாக செயற்பட்டவர்கள் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு போட்டி வைக்கப்பட்டு அந்த போட்டியில் வெற்றி பெறுபவரே பிக்பொஸ் வீட்டில் தலைவராகத் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் முதல் முறையாக வீட்டில் இருக்கும் அனைவரும் தலைவர் போட்டியில் போட்டியிடப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இதற்கான போட்டி ஒன்றை பிக்பொஸ் வைக்கின்றார். இந்த போட்டியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட நிலையில் அனிதா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதனை அடுத்து பிக்பொஸ் வீட்டின் இந்த வார தலைவர் அனிதா என்று அறிவிக்கப்பட்டவுடன் பாலாஜி உட்பட மற்றவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் அர்ச்சனாவும் அவரது குழுவினரும் பார்க்கும் பார்வையிலேயே அனிதா தலைவரானது அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது.

இவ் வாரம் அனிதா தலைவர் ஆனதை அடுத்து அடுத்த வாரமும் அவர் பிக்பொஸ் வீட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.