எம்.ஜி.ஆராக இறுதிநாள்: அரவிந்சாமியின் உறுக்கம்!

சாமி 568 720x450 1
சாமி 568 720x450 1

தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் நடிகர் அரவிந்த் சாமி இறுதிநாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த ஒளிப்படத்தை பகிர்ந்துள்ள அவர் புரட்சித் தலைவரின் அழகுக்கும்,  வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார்.  கடைசி நாள் படப்பிடிப்பு  தலைவி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.