ஜாக்கி ஜானுக்கு உதவி செய்த மாதவன்!

715348 r madhavan
715348 r madhavan

உலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஜாக்கிஜானுக்கு நம்ம ஊரு காதல் மன்னன் சாக்லேட் பாய் மாதவன் உதவி செய்துள்ள விஷயம் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

ஜாக்கி சான் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியாகவிருந்த திரைப்படம் வான்கார்டு. கடந்த சில வருடங்களாக பெரிய அளவு ஆக்சன் படங்களில் நடிக்காமல் காமெடி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் ஜாக்கிஜான்.

தன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் வெளியாகி வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் தற்போது மற்ற நாடுகளில் வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் ஜாக்கிஜான். ஜாக்கிஜான் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வான்கார்டு தமிழ் டிரைலரை மாதவன் இன்று மாலை வெளியிட உள்ளாராம். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எவ்வளவோ முன்னணி நடிகர்கள் இருந்தும் ஜாக்கிஜான் மாதவன் உதவியைத் தேடி இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மாதவன் ஒரு பேன் இந்தியா ஸ்டார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.