மாளவிகா மோகனனுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

pic 3
pic 3

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இத் திரைப் படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளார்கள்.

இந் நிலையில் மாளவிகா மோகனன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘மாஸ்டர்’ திரைப் படத்தை அடுத்து ஹிந்தியில் ஒரு இணையத்தொடரில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் நாயகனாக சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந் நிலையில் தற்போது இந்த இணையத்தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

எனவே ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.