விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது

vikram. new
vikram. new

சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’.

12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் இப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று ‘கோப்ரா’ இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது. குறித்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்காக ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.