தனுஷுக்கு போட்டியாக பாதியில் நிறுத்திய படத்தை கையில் எடுக்கும் சிம்பு!

simbu danush
simbu danush

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஐந்தாவது முறையாக இணையவுள்ள படத்திற்கு போட்டியாக சிம்பு மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஏற்கனவே உருவாகி பாதியில் நிறுத்தப்பட்ட படத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவுக்கு மிகச் சிறந்த நடிகராக தனுஷை உருவாக்கிக் கொடுத்தவர் தான் செல்வராகவன். தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் தனுஷ் மற்றும் செல்வராகவன் தற்போது ஐந்தாவது முறையாக ஒரு புது படத்தில் கமிட்டாகி உள்ளனர். இந்த படத்திற்கு செல்வராகவனுடன் எட்டாவது முறையாக கைகோர்த்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. யுவன் சங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் பாடல்களின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தற்போது அதைவிட சுவாரசியமான விஷயமாக தனுஷின் போட்டியாளராக கருதப்படும் சிம்பு மீண்டும் செல்வராகவன் படத்தை தூசி தட்ட உள்ளாராம். 2018 ஆம் ஆண்டு செல்வராகவன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் கான். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆனது.

ஆனால் பைனான்ஸ் பிரச்சினையில் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ், செல்வராகவனுடன் ஒரு புது படத்தில் இணைந்துள்ளதால் அவருக்கு போட்டியாக இருக்கும் சிம்பு மீண்டும் கான் படத்தை தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். இதனால் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.