மூன்று வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வரும் நிவின் பாலி!

09 1465451070 nivin pauly1 600
09 1465451070 nivin pauly1 600

நிவின் பாலி மலையாள நடிகராக இருந்தாலும் பிரேமம் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களால் தமிழ் நடிகர் போலவே கொண்டாடப்பட்டார். ஆனால் அதற்கு பிறகு நேரடி தமிழ் படமாக வெளியான ரிச்சி படம் அவருக்கு பெரிய அளவு பெயரை பெற்றுக் கொடுக்கவில்லை.

2017 ஆம் ஆண்டு வெளியான ரிச்சி படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு வர சிறிது தயக்கம் காட்டிக் கொண்டிருந்த நிவின் பாலி தற்போது மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

அந்த படத்தை ராம், பேரன்பு, தரமணி, தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய ராம் இயக்க உள்ளாராம். சமீபத்தில் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு மற்றும் தரமணி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

எப்போதுமே வித்தியாசமான கதைகளை எதார்த்தமான சினிமாவாக தரக்கூடியவர் தான் ராம். அந்த வகையில் மெகாஸ்டார் மம்முட்டிக்கு பேரன்பு என்ற உணர்ச்சிபூர்வமான படத்தை கொடுத்தார்.

தற்போது நிவின் பாலியை வைத்து வித்தியாசமான படம் ஒன்றை இயக்க உள்ளாராம் ராம். இதற்கான கதை விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாகவும் அடுத்த வருட தொடக்கத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் நிவின்பாலி நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளதால் தற்போது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.