முன்னணி இயக்குனரான ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ள சிம்பு!

201901290259415536 CutOut Into the hopper Not to pour milk Actor Simbu denies SECVPF
201901290259415536 CutOut Into the hopper Not to pour milk Actor Simbu denies SECVPF

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகராக இருப்பவர் தான் சிலம்பரசன். இவர் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே இயக்குனர், கதாசிரியர், பாடகர் என தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்திய காரணத்தினால் கோலிவுட்டின் முக்கிய அந்தஸ்தை பெற்றார். இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக தனது மவுசை இழந்தார் சிம்பு. ஆனாலும் இவருடைய ரசிகர்களின் ஆதரவு இன்றுவரை குறையாமல் தான் உள்ளது.

சமீபத்தில் சிம்பு தனது ரசிகர்களுக்காக உடல் எடையை பெருமளவு குறைத்ததோடு, தனது கேரியரிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதனால் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

அந்தவகையில் சிம்புவின் நடிப்பில் தற்போது ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படம் தயாராகி, பொங்கல் அன்று ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை காண சிம்புவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது தமிழ் சினிமாவிற்கு கற்றது தமிழ், தரமணி, தங்கமீன்கள் போன்ற தரமான படங்களை தந்த இயக்குனர் தான் ராம். இவ்வாறிருக்க ராம் சிம்புவை வைத்து அடுத்ததாக புதியதொரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளாராம்.

மேலும் ராம், சிம்பு இணையும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல், தற்போது ராம், சிம்பு, சுரேஷ் காமாட்சி ஆகிய மூவரும் கலந்துரையாடுவது போல உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

எனவே, சிம்புவின் அதிரடி மாற்றத்தால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிவதை பார்த்த ரசிகர்கள் பலர், சிம்புவிற்கு தங்களது வாழ்த்துக்களை இணையதளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.