பிக்பாஸ் ஆரிக்கு வில்லனாகும் சரத்குமார்!

202101221230198055 Tamil News Tamil cinema Appani Sarath villain for Aari SECVPF
202101221230198055 Tamil News Tamil cinema Appani Sarath villain for Aari SECVPF

பிக்பாஸ் சீசன்-4 வெற்றியாளரான நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க உள்ளார்.

பிக்பாஸ் சீசன்-4 வெற்றியாளரான நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கும் படத்தை அபின் ஹரிஹரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர். இதில் ஆரி முதன்முறையாக காவற்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.


இந்நிலையில், இப்படத்தில் ஆரிக்கு வில்லனாக இளம் மலையாள நடிகர் சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் எனும் படத்தில் அப்பாணி ரவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றதால் இவரை அப்பாணி சரத் என்றே அழைக்கின்றனர். 

202101221230198055 1 aad65. L styvpf

இவர், தமிழில் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம், விஷாலின் சண்டக்கோழி-2 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டோ சங்கர் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.