இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் யோகிபாபு!

jpg 1
jpg 1

சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். தற்போது இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடிக்க உள்ளார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் யோகிபாபு, ஏற்கனவே தடம் படத்தில் அருண்விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தாலும், இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் தற்போது தான் முதன்முறையாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.