13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கிய திருமுருகன்!

kalyana veedu1212323 1562217776
kalyana veedu1212323 1562217776

மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

இதையடுத்து அவர் பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.

தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.