இலங்கையின் பிரபல நடிகரான ஜெக்சன் அந்தனியின் மகன் சஜித அனுத்தரவுக்கு கொரோனா!

1613903534 356054 hirunews 1
1613903534 356054 hirunews 1

இலங்கையின் பிரபல நடிகரான ஜெக்சன் அந்தனியின் மகன் சஜித அனுத்தரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், தம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.