அதர்வாவுக்கு தந்தையாக நடிக்க உள்ள அருண் பாண்டியன்!

Re entry with remake movie .... Arun Pandian who acted after 16 years
Re entry with remake movie .... Arun Pandian who acted after 16 years

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது அன்பிற்கினியாள் என்கிற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார். இது மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ஹெலன் படத்தின் ரீமேக் ஆகும். அன்பிற்கினியாள் படம் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகர் அருண் பாண்டியன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் அருண் பாண்டியன் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவர் நடிகர் அதர்வாவுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.