மனைவியிடம் தோற்றுப்போன ஜெயம் ரவி

pictures vanamagan press meet jayam ravi director vijay others photos 0004
pictures vanamagan press meet jayam ravi director vijay others photos 0004

தமிழ் சினிமாவில் பிசியாக படங்களில் நடித்து வரும் ஜெயம்ரவி, தன் மனைவியுடன் தோற்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மனைவியிடம் தோற்றுப்போன ஜெயம் ரவி… குவியும் லைக்குகள்
மனைவியுடன் ஜெயம்ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் ‘பூமி’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜெயம் ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மனைவி ஆர்த்தி ரவியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மனைவியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட ரவி அதை, செய்ய முடியாமல் தோற்கிறார். இந்த அழகான வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் “பெண்கள் எதையும் செய்யலாம். உங்கள் அன்புக்குரியவருடன் இதை முயற்சிக்கவும்! நீங்கள் வலுவான பெண்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சேலஞ்சுக்கு பெயர் கிராவிட்டி சேலஞ்ச் என்று பெயர். தற்போது இந்த சேலஞ்ச் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.