மாற்றம் செய்யப்பட்ட விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர்!

vijay antony
vijay antony

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இப்படம் டப் செய்து வெளியாகி அதிக வசூலையும் குவித்தது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி தெரிவித்து இருந்தார். முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படவேலைகளில் இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை.

இதனால், பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பிரியா கிருஷ்ணசாமி இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இவருக்கு பதிலாக மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருக்கிறார்.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன், தற்போது விஜய் ஆண்டனியை வைத்து கோடியில் ஒருவன் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.