நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று

Aamir Khan
Aamir Khan

போலிவூட் நடிகர் அமீர் கான் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதுடன், தற்சமயம் அவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான போலிவூட் நடிகர்களின் பட்டியலில் அமீர்கான் சமீபத்தியவர் ஆவர்.

அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அமீர் கான் அனைத்து கொவிட் -19 வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருகிறார்

அமீர்கானுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர் தனது ஊழியர்களுக்கு சோதனை எடுக்கவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் மற்றும் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் கூறியுள்ளது.