ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட வலிமை படத்தின் வில்லன்

1617073895 7814
1617073895 7814

வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா இனிமேல் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

கார்த்திகேயா தெலுங்கில் அறிமுகமான ஆர் எக்ஸ் 100 எனும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அதன் பின்னர் எந்த படமும் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால்தான் அவர் இப்போது வில்லனாக கூட நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இனிமேல் ரசிகர்கள் விரும்பும் படத்தைக் கொடுப்பேன் என்றும் தன்னுடைய தவறுகளை உணர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.