ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள சுவாதி!

actress swathi latest stills 14466369455447
actress swathi latest stills 14466369455447

தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்” பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது.

தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நடிகை சுவாதி, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அதன்படி தெலுங்கில் உருவாகும் ‘பஞ்ச தந்திரம்’ என்கிற ஆந்தாலஜி படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹர்ஷா புலிப்புகா இந்தப்படத்தை இயக்குகிறார்.