உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் கருப்பன் பட நடிகை தன்யா ரவிச்சந்திரன்!

11 34
11 34

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகை தன்யா, ஊடக நிருபர் வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.