விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் -நடிகர் கார்த்தி

1620024557 2036
1620024557 2036

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு. க அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளியுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!