நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்

1620366645 4416
1620366645 4416

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

மற்ற எல்லா மொழிப் படங்களை விடவும் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக வலம்வந்தார். ஆனால் இப்போது அங்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்நிலையில் இப்போது தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். 61 வயதாகும் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிக்க சமீபகாலமாக நடிகைகள் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.