சந்தோஷமா போய்ட்டு வாங்க… தாத்தாவின் மறைவு குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்!

202105091138150231 Tamil News Tamil cinema Priya Bhavani shankar grand father passed away SECVPF
202105091138150231 Tamil News Tamil cinema Priya Bhavani shankar grand father passed away SECVPF

நடிகை பிரியா பவானி சங்கர், மறைந்த தனது தாத்தா குறித்து சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இந்நியைில், நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா இறந்துவிட்டார்.

 
மறைந்த தாத்தாவை பற்றி அவர் தனது சமூகவலைள பக்கத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது: “தாத்தா! ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி, 10 பேரப் பசங்கள்ல, 8 பேர வைத்தியராக்கி, அவங்களையும் வைத்தியர்களுக்கு கட்டிக்கொடுத்து, தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.


நான் தாத்தாவோட பேவரைட்லாம் இல்ல. வயதானவர் இறந்துவிட்டார் என்று கூட வைத்திருக்கலாம். சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ என்கிற ரகம் நாம. 10வது வரை பள்ளி விடுமுறை விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகள்னு உடையாத இடம் எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு சில குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

பிரியா பவானி சங்கர்

ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா அவ்வளவு ஒழுக்கம். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை டிவியை இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த கதவு வச்ச டிவி தான். பெப்சி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த நிகழ்ச்சிகள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான்.

இதெல்லாம் தினமும் ஞ◌ாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி ஞாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மருத்துவக் கல்லூரி போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார்.

எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா தன்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு தன்னோட அம்மாக்கு வாங்கின தோடு் இது. இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார். இது விலை மதிப்பு அற்றது. அந்த முதியவரின் மதிப்பு தெரிந்தது. உங்க அம்மாவோட தோடையும், உங்க பொண்னையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.