கொரோனாவிற்கெதிராக களமிறங்கும் அஜித் அணி!

1620625549 ajith 2 1
1620625549 ajith 2 1

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்த நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அஜித்தின் தக்ஷா அணி களம் இறங்கி உள்ளது.

திருநெல்வேலியின் பல பகுதிகளில் சுகாதாரத்துறையின் உதவியுடன் கிருமி நாசினிகளை தெளித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் உலகத்தையே ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ். 2வது அலை என்ற பெயரில் அதன் வேகத்தை சிறிதும் குறைக்காமல் தலைவிரிக்கோலத்தில் ஆடிவருகிறது.

இந்த கொடிய வைரசை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு, இரவு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என எத்தனைக் காட்டுப்பாடுகளை போட்டாலும் அதன் வீரியம் குறையாமல் உள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்பாவது கொரோனாவின் உக்கிரம் குறையுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

கொரோனா முதல் அலையின் போது, ட்ரோன்களைக் கொண்டு, பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் நடிகர் அஜித்தின் வழிகாட்டுதலின் படி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. தக்ஷா குழு உருவாக்கிய இந்த ட்ரோன் கடந்த ஆண்டுஅனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், மேலும் தமிழ்நாட்டில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அஜித்தின் ´தக்ஷா´ குழு கைகோர்க்க முன்வந்துள்ளது. அதன்படி ட்ரோன் மூலம் திருநெல்வேலி சாலையின் பல இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. சுகாதாரத்துறையுடன் இணைந்து தக்ஷா குழுவினரும் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.