‘மஹா’ திரைப்படத்தின் வெளியீட்டை அறிவிக்க காலம் வழங்குங்கள்!

samayam tamil 3
samayam tamil 3

சிம்பு, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகியுள்ளது மஹா.
மஹா படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.
மஹா படம் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் புதுப்புது குவிஸ்! இலவசமாக விளையாடி பரிசுகளை வெல்லுங்கள்!
நான்கு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மஹா, ஹன்சிகாவின் 50 வது திரைப்படம். நாயகி முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில்
சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மஹா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை படத்தின் இயக்குனர் ஜமீல் மறுத்தார். இந்நிலையில் மஹா திரைப்படம் வெளியீடு குறித்து முக்கிய தகவல் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படத்தின் வெளியீடு குறித்து சில தவறான தகவல்கள் மக்களிடத்திலும், ஊடகங்களிடையேயும் உலா வருவது எங்களை வந்தடைந்தது. மஹா திரைப்படம் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் மூலம் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இணைய வெளியில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை வெளியிட எலெக்ட்ரா என்டர்டெய்ண்மெண்ட் கடமைப்பட்டுள்ளோம். மஹா திரைப்படத்தின் உண்மை தகவல்கள் பினவருமாறு,

மஹா திரைப்படத்தின் அணைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியீட்டிற்கு முழுமையான நிலையில் தயாராக உள்ளது.

தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குனர் தரப்பில் தயாரிப்பு தரப்பு மீது சில குற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் தரப்பின் சார்பில், தயாரிப்பு தரப்பு மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அந்த வகையில் மஹா படத்தின் மீது உயர்நீதிமன்றம் இதுவரை எந்தவொரு தடையும் பிறப்பிக்கவில்லை. உயர்நீதி மன்றம் சார்பில் வழக்கு குறித்து இயக்குனர் தரப்பு வழக்கறிஞர் வாயிலாக சட்டப்பூர்வ அறிவிப்பு கடிதம் பெறப்பட்டது. அதில் வழக்கு விசாரணை மே 19 அன்று நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எங்கள் தரப்பு சார்பாக விஜயன் சுப்ரமணியன் மூலம் பதில் பிராமண பத்திரம் மே 18 தாக்கல் செய்யப்பட நிலையில், வழக்கின் விசாரணை மே 19 ஆம் தேதி எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மஹா படத்தின் மீது எந்தவொரு தடையையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. வழக்கின் விசாரணையை யூன் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது உயர்நீதி மன்றம். மேற்கூறப்பட்ட தகவலின் அடிப்படையில் இதுவரை நீதிமன்றம் மஹா திரைப்படத்தின் மீது எந்தவொரு தடையும் பிறப்பிக்கவில்லை என்பதே உறுதியான தகவலாகும்.

மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தின் உறுதியான முடிவிற்காக காத்திருக்கிறோம். மேலும் தற்போதைய பொது முடக்க காலத்தில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளத, கருத்தில் கொண்டு மஹா படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இதன் பொருட்டு நடிகர் சிம்பு நடிகை ஹன்சிகா ஆகியோரின் தீவிர ரசிகர்கள் தற்போதையை நிலையை கருத்தில் கொண்டு மஹா திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை அறிவிக்க சிறிது அவகாசம் அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். அனைவரும் உடல்நலத்தை பேணி, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.