நடிகை பிரணிதா சுபாஷ் திடீர் திருமணம்

1622529762 3828
1622529762 3828

கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலம் ஆன நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.

நேற்று முன்தினம் நடிகை பிரணிதாவுக்கு நிதின் ராஜு என்பவருடன் மிகவும் நெருக்கமான உறவினர்கள் நண்பர்களோடு எளிமையான முறையில் பெங்களுருவில் திருமணம் நடந்துள்ளது. பிரணிதாவின் நீண்ட நாள் காதலரான நிதின் ராஜு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேட்டியளித்த நடிகை பிரணிதா, திருமணத்திற்கு அழைக்காத்தற்கு மன்னித்துவிடுங்கள். கொரோனா பிரச்சனையால் எப்போது திருமணம் நடைபெறும் என்பதை எங்களாலே உறுதி செய்ய முடியவில்லை. ஊரடங்கில் இருந்து வெளியில் வந்ததும் இதை சிறப்பாக கொண்டாடுவோம் என கூறியுள்ளார்.