மகேஷ்பாபுவுடன் இணையும் பிரபல நடிகர்!

மகேஷ்பாபு 750x375 1
மகேஷ்பாபு 750x375 1

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.