பாபா பாஸ்கர் வீட்டில் நடந்தது என்ன?

1623390363 baba 2
1623390363 baba 2

தனுஷ் நடித்த “திருவிளையாடல் ஆரம்பம்” படத்திற்கு நடன இயக்குனராக அறிமுகமானவர் பாபா பாஸ்கர். அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்த “குப்பத்து ராஜா” என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார்.மேலும் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக் கொண்டார். “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்த நிலையில் பாபா பாஸ்கர் மகள் சடங்கு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.