மணிவண்ணனின் நினைவு தினம் இன்று

1623736663 4063
1623736663 4063

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனராகவும் , நடிகராகவும் விளங்கிய மணிவண்ணன்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பல படங்களை இயக்கிய மணிவண்ணன், மிகசிறந்த நடிகராகவும் இருந்துள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி நாட்களில் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை பார்த்த மணிவண்ணன் அதுகுறித்து பாரதிராஜாவுக்கு கடிதமே எழுதியுள்ளார்.

பின்னாட்களில் பாரதிராஜாவின் படங்களான நிழல்கள், டிக் டிக் டிக் போன்ற படங்களில் பணியாற்றிய மணிவண்ணன் பாரதிராஜாவின் படங்களிலேயே நடித்தும் உள்ளார். பின்னர் இயக்குனராக நூறாவது நாள், அமைதிப்படை போன்ற தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படங்களை இயக்கிய மணிவண்ணன் 90களுக்கு பிறகு அதிகமான படத்தில் நடித்துள்ளார்.

ஈழ ஆதரவு, தமிழ் தேசிய ஆதரவாளரான மணிவண்ணன் தொடர்ந்து அவரது படங்களில் தமிழ் அரசியல், பகுத்தறிவு, கடவுள் மறுப்பு போன்றவற்றையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளார்.