தனுஷ்தான் வழிகாட்டி – சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் 750x375 1
சந்தோஷ் நாராயணன் 750x375 1

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனுஷின் உந்துதலே காரணம் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘நான் எப்போதும் தனுஷிடம்  நீங்கள் இந்தியாவின் மிகச் சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர் எனக் கூறுவேன். அதிலும் மிகச் சிறந்தவர்களில் முதன்மையானவர் என்றே கூறுவேன்.

அவர் ஒரேநேரத்தில் முற்றிலும் வித்தியாசமான படங்களை செய்கிறார். அவர் எழுதவும் செய்கிறார். ரவுடி பேபி போன்ற பாடல்களை படைக்கிறார். தற்போதைய காலக்கட்டத்தில் இன்றைய தலைமுறையினர் என்ன விரும்பிகிறார்கள் என்பது தனுஷிக்கு அத்துப்படியாகத் தெரிந்திருக்கிறது.

இந்த படத்திற்கு எது தேவையோ, அதைச் சரியாக சொல்வார். இந்த படத்தின் இசைக்கு அவர் தான் வழிக்காட்டி’ எனத் தெரிவித்துள்ளார்.