விபத்தில் சிக்கிய நடிகர் – மூக்கில் தையல்கள்!

1624425208 nadikar 2
1624425208 nadikar 2

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத் பாசில். இவர் தமிழில் வெளியான வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடித்துள்ளார்.

மலையன்குஞ்சு என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும் போது, பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். இந்த விபத்த்தின் அனுபவங்களை நடிகர் பகத் பாசில் தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியதாவது: ” விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தேறி வருகிறேன். ஆபத்துக்கு அருகில் சென்று நான் உயிர் பிழைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன்.

இப்படி சமயோசிதமாக நான் செய்தது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார். விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளன. அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும் ” என்று பகத் பாசில் கூறினார்.