மீண்டும் தொடங்கிய சாணிக்காயிதம் படப்பிடிப்பு

1625222930 3232
1625222930 3232

இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதையடுத்து அவரும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது.

படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தடைபட்டு இருந்த படப்பிடிப்பு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.