சின்னத்திரையில் அறிமுகமாகும் ரன்வீர் சிங்!

1625362089 ranveer singh 2
1625362089 ranveer singh 2

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

2010-ல் பாலிவுட்டில் நடிகரான அறிமுகமான ரன்வீர் சிங், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். 2018-ல் பிரபல நடிகை தீபிகா படுகோனைத் திருமணம் செய்துகொண்டார். ஷங்கர் இயக்கவுள்ள அந்நியன் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தி பிக் பிக்சர் என்கிற புகைப்படங்களைக் கொண்ட கேள்வி – பதில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார் ரன்வீர் சிங். இதன்மூலம் சின்னத்திரையில் அவர் அறிமுகமாகிறார். தி பிக் பிக்சர் நிகழ்ச்சி ஆகஸ்ட் முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.