சூர்யாவிற்கு எதிராக பாஜக தீர்மானம்!

1625445428 surya 2
1625445428 surya 2

மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வரும் சூர்யா, மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் நல திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் என நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம், அக்கட்சியின் சென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது.

பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பின்வரும் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஜெய்ஹிந்த் எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு பேரவை உறுப்பினர் ஈஸ்வரனுக்கு கண்டனம்.
  • ஒன்றிய அரசின் மக்கள் நலத்திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பத்திற்காகத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும், திமுக அரசுக்கு கண்டனம்.
  • கோவில் நிலங்களை மீட்க முதல்வர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீட்கப்படும் நிலங்களை உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
  • கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு மனப்பூர்வமான பாராட்டுகள்.
  • நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் உடனடியாக திறக்க வேண்டும்.
  • திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், கும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.