ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை!

1625881119 nandita swetha 2
1625881119 nandita swetha 2

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வரிசையாக படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

இந்நிலையில் நடிகை நந்திதா சமூக வலைத்தள பக்கத்தின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது, ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று அவருடைய உடல் உறுப்பை மையப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான நந்திதா, இந்த கேள்வியை உங்களுடைய அம்மா, அக்கா, தங்கச்சி போன்றோரிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். சமீபகாலமாக பல நடிகைகளும் இதே மாதிரி மோசமான கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.