சார்பட்டாவின் விளைவு; பாய்ந்து பாய்ந்து குத்தும் ஸ்ருதிஹாசன்

202108211729400077 Tamil News Tamil cinema Shruti haasan New boxing video SECVPF
202108211729400077 Tamil News Tamil cinema Shruti haasan New boxing video SECVPF

தமிழில் முன்னணி நடிகையாக வலம் ஸ்ருதிஹாசன் புதிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை பார்த்த தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இணைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துசண்டை பழகிய காணொளியை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் இர்பான் கான் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். ஸ்ருதிஹாசனின் குத்துசண்டை காணொளிக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.