தளபதி 66 படத்தை இயக்குவது வம்சி பைடிபல்லி!

thalapathy66 1623931496
thalapathy66 1623931496

விஜய்யை வைத்து தளபதி 66 படத்தை இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி.

தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்குவார் என்று கூறப்பட்டது. பின்னர் வேறு சில இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில் தளபதி 66 படத்தை தான் இயக்குவதாக வம்சி பைடிபல்லி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தளபதி 66 படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

வம்சி பைடிபல்லியின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வம்சி சொன்ன கதையில் திருத்தம் செய்யச் சொன்னாராம் விஜய். அவரும் சரியென்று கதையை திருத்தியிருக்கிறார். இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். டெல்லியில் முக்கிய காட்சிகளை படமாக்கிவிட்டு படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது. டெல்லியில் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஜய் பொருட்கள் வாங்க சென்றபோது எடுக்கப்பட்ட காணொளி வெளியானது.

பீஸ்ட் படப்பிடிப்பு நவம்பர் மாதம் நிறைவடையும். அந்த படத்தை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.