விஷாலின் அடுத்த படத்தில் பிரபு!

1601646826 9795
1601646826 9795

நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் இளைய திலகம் பிரபு இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

நடிகர் விஷால் தற்போது நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் இளையதிலகம் பிரபு இணைந்துள்ளார். ஏற்கனவே விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் ஆம்பள ஆகிய திரைப்படங்களில் பிரபு நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அவர் விஷால் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது