பிரபல நடிகை சங்கவியின் பிறந்தநாள் இன்று

8e9e4217f765751131b7525b5518fbd5
8e9e4217f765751131b7525b5518fbd5

கடந்த 90 களில் விஜய் அஜித் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை சங்கவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தல அஜித் நடித்த முதல் திரைப்படமான அமராவதி என்ற திரைப்படத்தில் தான் நடிகை சங்கவியும் அறிமுகமானார் . அதன்பின் இரண்டாவது படத்திலேயே அவர் விஜய்யுடன் ரசிகன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் விஜய்யுடன் அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அந்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.