காதலரை அறிமுகம் செய்த நடிகை ரகுல் பிரீத் சிங்.. திருமணம் எப்போது தெரியுமா

10 1
10 1

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடிக்கிறார்.

தனது பிறந்த நாளான கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஹிந்தி பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை தான் காதலிப்பதை வெளிப்படையாக அறிவித்தார் ரகுல்.

அதேபோல் ஜாக்கியும் காதலை உறுதிப்படுத்தி ரகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு முன்பு தனது கைவசமுள்ள அனைத்து படங்களிலும் நடித்து முடிக்க எண்ணி உள்ளாராம் ரகுல்.