நடிகர் தேங்காய் சீனிவாசனின் பிறந்த நாள் இன்று

seenivasan
seenivasan

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1965-ஆம் ஆண்டு ஒரு விரல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான தேங்காய் சீனிவாசன் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்

இந்த நிலையில் கடந்த 1987ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி தேங்காய் சீனிவாசன் மறைந்தார். இருப்பினும் அவரது நகைச்சுவை காட்சிகள் இன்றும் அழியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .