கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜாவும் பால்கே விருதுக்கு தகுதியானவர்கள் – வைரமுத்து

வைரமுத்து 750x375 1
வைரமுத்து 750x375 1

கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசின் கண்களுக்கு காட்டுவோம் என கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடிகர் ரஜனிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவில், பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ள ரஜினிகாந்த்தை ஊர்கூடி வாழ்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.