சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன்!

sru8
sru8

சிரஞ்சீவி நடிக்க உள்ள அடுத்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசியலில் இருந்து விலகிய சிரஞ்சீவி இப்போது வரிசையாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்போது ஆச்சார்யா, லூசிபர் மற்றும் போலே ஷங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் பாபி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.