தமிழரசன் தெலுங்கில் விக்ரம் ரத்தோட் ஆனார்!

screenshot2327 1639934581 8
screenshot2327 1639934581 8

கோடியில் ஒருவன் படத்திற்கு பிறகு வெளிவர இருக்கும் விஜய் ஆண்டனியின் படம் தமிழரசன். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்திற்கு தெலுங்கில் விக்ரம் ரத்தோட் என்று தலைப்பு வைத்துள்ளனர். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரித்துள்ளார்.

ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சங்கீதா, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர் ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜ,ர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.

படத்தின் தெலுங்கு வெர்சன் பாடல் வெளியீட்டு விழா திருப்பதியில் நடந்தது. அப்பல்லோ புரொடக்ஷன் சார்பில் ரவுரி வெங்கட சாமி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுகிறார்.