இயக்குனர் ஆச்சார்யா ரவி மறைவு!

NTLRG 20211228174951417524
NTLRG 20211228174951417524

இயக்குனர்கள் லியாகத் அலிகான், பாலாவிடம் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் ஆச்சார்யா ரவி. விஜய் நடித்த ‛ஷாஜகான்’ படத்தை ரவி என்ற பெயரில் இயக்கினார். இப்படம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விக்னேஷ் நடித்த ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கியதை அடுத்து ஆச்சார்யா ரவி என மாறினார். அதன்பின் ‘டம்மி டப்பாசு’ படத்தை இயக்கினார். உடல்நலக் குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாரடைப்பால் இவரது உயிர் இன்று(டிச.,28) பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.