மிஷ்கினுடன் இணையும் விஜய் சேதுபதி

201909301954043987 Vijay Sethupathi joins Vijay Official announcement SECVPF
201909301954043987 Vijay Sethupathi joins Vijay Official announcement SECVPF

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மிஷ்கின் அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் விஷாலுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ‘துப்பறிவாளன் 2’ ஆம் பாகத்தில் இருந்து விலகினார்.

தற்போது அவர் பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சிறிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது தொடர்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.