ஸ்பெயினுக்குச் சென்ற-விக்னேஷ் சிவன் – நயன்தாரா

nayanthara vignesh shivan spain vacation pictures
nayanthara vignesh shivan spain vacation pictures

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் விடுமுறையைக் கழிக்க ஸ்பெயினுக்குச் சென்றுள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவிற்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.

பின், தேனிலவு சுற்றுலாவிற்கு வெளிநாடுகளுக்குச் சென்ற இருவரும் படப்பிடிப்பு காரணங்களால் விரைவிலேயே சென்னை திரும்பினர்.

அதற்கடுத்து, விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கம் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சியை இயக்கும் பணிகளில் இருந்தார்.

இந்நிலையில், ஒலிம்பியாட் நிறைவு பெற்றதும் ஓய்வு கிடைத்ததால் தனி விமானம் மூலம் விடுமுறையைக் கழிக்க இருவரும் ஸ்பெயினின் முக்கிய நகரமான பார்சிலோனாவுக்குச் சென்றுள்ளனர்.